தடுப்பூசி போடாதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவும்-WHO எச்சரிக்கை

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய  கொரோனா வைரஸ் கிருமிகளில் டெல்டா வைரஸே அதிகம் தொற்று தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும்போது, “ டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதை நன்கு அறிவோம். இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் டெல்டா வைரஸ்தான் அதிகம் தொற்று தன்மை கொண்டது. 85 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி போடாதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது. தளர்வுகளை அறிவிப்பதால் உலகம் முழுவதும் தொற்று அதிகரித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறேம்.

சில வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாகதடுப்பூசிக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டது. இது மிகவும் கவலையளிக்கிறது” என்றார்.