சீனா விழுங்கும் நேபாளப் பகுதிகள்

நேபாளத்தின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக சீன அதிபர் ஜின்பிங் இன் உருவ பொம்மையை  எரித்து போராட்டம் நடைபெற்றது.

நேபாளத்தின் 36 ஹெக்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக நேபாள கணக்கெடுப்புத் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் தெரியவந்தது. அதில், ஹம்லா மாவட்டத்தின் பக்தரேவில் 6 ஹெக்டரும், கர்னாலி மாவட்டத்தில் 4 ஹெக்டரும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது திபெத்தின் புராங் பகுதியில் உள்ளதாக ஆய்வில் கூறப்படுகின்றது. இது போன்று பல இடங்களில் நேபாளத்தின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதால் சுமார் 100 ஹெக்டரிற்கு மேற்பட்ட நிலங்களை சீனாவிடம் இழக்க வாய்ப்புள்ளது.

இதனால், நேபாளத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. ஆக்கிரமித்துள்ள நேபாள இடங்களை சீனா திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், சீனாவே திரும்பிப் போ என்றும் கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது. இந்தப் போராட்டம் மேலும் பல இடங்களுக்கு பரவி வருகின்றது.