சிறீலங்கா படை அதிகாரிகள் மீது பயணத்தடை – நாடுகளிடம் வேண்டுகோள்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது பயணத்தடைகளை கொண்டுவருவது தொடர்பில் நாடுகள் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசெல் பசெலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக த ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடுகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீதான பயணத்தடை மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

28 இற்கு மேற்பட்ட படை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை சிறீலங்கா அரச தலைவர் பொதுமக்களுக்கான சேவை பணிகளில் நியமித்துள்ளார். ஆனால் அவர்களில் பலர் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இனங்காணப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.