ட்ரம்பின் ஆதரவாளர்கள்  மீண்டும் தாக்கலாம்- அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்  எச்சரிக்கை

ட்ரம்பின்  ஆதரவாளர்கள்  மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி 6ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட தாக்குதலை நடத்திய   டிரம்பின்  ஆதரவாளர்களால், தீவிரமாக தங்கள் கருத்தை நம்பக் கூடியவர்கள் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 ஆனால் எங்கு தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது, எப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது போன்ற தகவல்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 6ம் திகதி, அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் பணியிலிருந்த போது அக்கட்டடம் தாக்குதலுக்கு உள்ளானது.

அதற்கு முன், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியில், தன் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில்   உரையாற்றிய போது, அமெரிக்க அதிபர் தேர்தல் திருடப்பட்டுவிட்டது.  நீங்கள் கடுமையாகப் போராடவில்லை எனில், இதற்கு மேல் உங்களுக்கு ஒரு நாடே இருக்காது,” என்றார்.

இதையடுத்து ட்ரம்பின் ஆதரவாளர்கள், கேப்பிட்டல் கட்டடத்தை நோக்கிச் சென்று, பாதுகாப்பு வீரர்களைக் கடந்து, நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.