சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக ஐ.நாவில் யஸ்மின் சூக்கா மனு

சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில்    மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையின் முன்னாள் அதிகாரியான யஸ்மின் சூக்கா சமர்ப்பித்த அறிக்கையில் இந்த அதிகாரிகளின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக,  ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரியா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக 30பேர் சாட்சியமளித்துள்ளதாகவும் யஸ்மின் சூக்கா தெரிவித்தார். விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

குறிப்பிட்ட விசேட அதிரடிப்படைியினர் மீது  சிறைக் கைதிகள் பலரைக் கொன்றமை உட்பட பல குற்றசாட்டுக்கள்   குறிப்பிடப்பட்டுள்ளது.