சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும்: ஜமால் காதலி வலியுறுத்தல்

ஜமால் கொலை வழக்கில் எந்தவித தாமதமும் இல்லாமல் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜமாலின் காதலி ஹடிஸ் சென்ஜிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2018 ஆண்டு வெளியுறவு தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால்  கொலையின் பின்னணியில் சவுதி இளவரசர் இருக்கிறார் அமெரிக்க அரசின் புலனாய்வு துறை கடந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்  ஜமால் கொலை  வழக்கில்  சவுதி  இளவரசர் தாமதிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜமாலின் காதலி ஹடீஸ் செஞ்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஹடீஸ் செஞ்சிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எந்தவித குற்றமும் புரியாத, அப்பாவி மனிதரை கொடூரமாக கொலை  செய்த வழக்கில் சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிப்பட வேண்டியது அவசியம். இது ஜமாலுக்கு கிடைக்கும் நீதிமட்டுமல்ல, எதிர்காலத்தில் இம்மாதிரியான செயல்களை தடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அறிக்கையை சவுதி அரசு தவறானது, முற்றிலும் எதிர் மறையானது என்று விமர்சித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.