வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
நீதி பெற்றுக்கொடுக்கப்படாமல் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலேயே அவர்களது உறவினர்கள் பலர் மரணித்துள்ளதாகவும், எஞ்சியுள்ள தாங்களும் மரணிக்க முன்னர் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொலைக் குற்றங்களைச் செய்த இலங்கை அரச படைகளை விசாரிக்க முடியாதா? என்றும் அவர்கள் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளனர்.
சர்வதேசமும் இணைந்தா? தமிழினத்திற்கு அநீதி இழைக்கிறது என்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியிருந்தனர்.



