உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் எட்டுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு அனுமதி கோரி, பிரேரணைக் கடிதத்தை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு கையொப்பமிடும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை (26) முன்னெடுத்தனர்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 83(1) இன் கீழ் இந்த விவாதத்தை நடத்துவதற்காக இந்த பிரேரணைக் கடிதம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



