சண்டிலிப்பாயில் மக்கள் போராட்டம்

வீட்டுத்திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாணகாண ஆளுநர் அலுவலக முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான்  3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பொறுமதியிலான வீட்டுத்திட்டம் கடந்த அரசாங்கத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடந்த அரசில் வழங்கப்பட்டுள்ளது.
1 153 சண்டிலிப்பாயில் மக்கள் போராட்டம்
படிப்படியாக வீட்டுத்திட்ட வேலைகள் முடிக்கும் பட்சத்தில் கட்டம் கட்டமாக பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு லட்சத்து 75 ஆயிரம்  ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் எந்த கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் நிதி நிறுவனங்களிடம் கடன்பட்டு வீட்டு வேலைகள் செய்தும் முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை. பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமலும் வீ;ட்டை முழுமையாக்காமலும் நிர்க்கதியில் இருப்பதாக தெரிவித்த மக்கள் தாம்  பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும்  எனவே இந்த வீட்டுத்திட்டத்துக்கான மிகுதிப்பணத்தை மிக விரைவில் வெபற்றுத்தர ஆளுநர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.