கொரோனா வைரசை கட்டுப்படுத்த நீண்டகாலம் எடுக்கும் – உலக சுகாதார நிறுவனம்

தற்போதைய கொரோனா வைரஸ் நீண்டகாலம் உலகில் இருக்கும் எனவே நாம் மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்ப அதிக நாள் செல்லும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் அடனொம் கிப்றியெசஸ் இன்று (22) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தற்போதும் உலகம் இழப்புக்களில் இருந்து மீளவில்லை, பல நாடுகளில் தற்போதே இந்த நோயின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் நாம் விரைவாகவே உலக நாடுகளை எச்சரித்திருந்தோம்.

நாம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்தோம், நாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது. யாரும் இறப்பதற்கு முன்னரே நாம் இது தொடர்பில் எச்சரித்திருந்தோம். அப்போது 82 பேரே பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஜனவரி 30 ஆம் நாள் நாம் எச்சரித்திருந்தோம். அதாவது இரண்டு மாதமும், 21 நாட்களுக்கும் முன்னர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.