கொரோனா தொற்றால் இந்தியாவில் 114 பத்திரிகையாளர்கள் பலி

இந்தியாவில் இது வரையில் கொரோனா தொற்றால் 114 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர் என ஜெனிவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நல அமைப்பு கூறியுள்ளது.

இந்தியா கொரோனா தொற்றின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,99,25,604ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,18,959 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இதுவரை மொத்தம் 15,71,98,207பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினம் களத்தில் நின்று செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில்,பிரேசிலில் 181, பெருவில் 140, இந்தியாவில் 114 பேர் என கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும் மெக்சிகோ 106, இத்தாலி 52, பங்களாதேஷ் 51, கொலம்பியா 4, அமெரிக்கா 47,ஈக்வடார் 46, யுனைடெட் கிங்டம் 28,  என மேலும் பல  நாடுகளில் பத்திரிகையாளர்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.