கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்கள் தனித்துவமாக உள்ளது -WHO

கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் கூறும்போது,  கொரோனா  தடுப்பு மருந்து குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில்  கொரோனா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. யாருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

 சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பரவியது முதல், கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறு உருவாக்கப்படும் மருந்துகள், பலகட்டப் பரிசோதனைகளின் போது, எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன. சில உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றியை எட்டியுள்ளன.

உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின்  கொரேனா தடுப்பூசியைப் பயன்படுத்த  பரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும்  தடுப்பு மருந்தும் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகளும் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.