களவாடப்பட்ட 6,143,000 அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது?

ஊடக அறிக்கை : பணத்தைப் பின்தொடர்ந்து – இலங்கையின் ஆயுத வியாபாரத்தில் களவாடப்பட்ட 6,143,000 அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது? என international truth and justice project கேள்வி எழுப்பியுள்ளது.

international truth and justice project அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

ஜொகானஸ்பேர்க்: பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இலங்கையினால் மிக் விமானம் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பித்து முப்பது வருடங்களுக்கு பின்னரும் இந்த வியாபாரத்தில் களவாடப்பட்டதாக உக்ரைன் நாட்டு வழக்கறிஞரால் கூறப்பட்ட ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்திற்கு என்ன நடந்தது என்பதற்கு இன்னமும் பதில் இல்லை.

பதிலாக, இந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை பற்றி பின்தொடர்ந்தமையால் லசந்த 08 ஜனவரி 2009 அன்று பட்டப்பகலிலேயே கொழும்பு மாவட்டத்தில்
வைத்துப்படு கொலை செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைகள் யூன் 2021 வரை ஒத்திப் போடப்பட்டிருப்பதனால் இந்த ஊடகவியலாளரின் படுகொலைக்கு கிடைக்கவேண்டிய நீதிக்கான நம்பிக்கைகள் குறைவடைந்து செல்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

international truth and justice project வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினை முழுமையாக அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்,https://itjpsl.com/assets/press/Tamil-Translation-of-Press-Release-08-January-2021.pdf