அரபிக் கடலில் தத்தளித்து வந்த மாலுமிகள் மீட்பு

சீன கப்பலில் பணியாற்றி வந்த 5 இந்தோனேசிய மாலுமிகளையும் கப்பலில் உயிரிழந்த ஒரு இந்தோனேசியரின் உடலையும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் மீட்டுள்ளது.
இதில் 5 இந்தோனேசிய மாலுமிகளின் பணி ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையிலும் மற்றொரு இந்தோனேசியர் கப்பலில் உயிரிழந்த நிலையிலும் இவர்கள் அரபி கடலில் பல நாட்களாக தத்தளித்து வந்த நிலையில் இறுதியாக இந்தோனேசியாவின் ரியூ தீவுகளுக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.
இதில் உயிரிழந்த குறிப்பிட்ட நபர், ஓமன் நாட்டு கடல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது உயிரிழந்திருக்கிறார். வெளிநாட்டினரின் உடலை ஓமன் வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாததாலும் கொரோனா கால பயணக் கட்டுப்பாடுகளாலும் உயிரிழந்த இந்தோனேசியரின் உடலைக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு இம்மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.