துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்-இலங்கை சுகாதார அமைச்சு

இலங்கை சுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த குடும்பநல உத்தியோகத்தரின் பயிற்சிநெறிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு முடிவுத் திகதி 2021.02.01ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில்,

இதற்கான அறிவுறுத்தல்களை (www.health.gov.lk) சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.  ஆட்சேர்ப்பிற்காக 2015/2016/2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஏதாவது ஒரு துறையில் சித்தியடைந்த இலங்கைப் பெண் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இவர்கள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.health.gov.lk) ஊடாக மாத்திரமே இதற்றாக விண்ணப்பிக்க முடியும்.
2019.08.30ஆம் திகதிய 2139 என்னும் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் க.பொ.த (உ-தர) பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய விண்ணப்பித்து, நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டு ஏற்கனவே குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சிக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் இந்த வர்த்தமானி அறிவிப்பின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு உதவுவதற்காக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பிரரந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கு உதவி தேவையானவர்கள் அலுவலக நாட்களில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை தேவையான ஆவணங்களுடன் செல்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வெளிக்களப் பயிற்சி ஆறு மாதங்கள் உள்ளடங்கலாக ஒன்றரை வருடப் பயிறசிநெறி வழங்கப்படும். அத்துடன் வடமாகாணத்தில் இவ்மருத்துவ சேவை சார்ந்த பதவி நிலைக்கு பெருமளவான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

எனவே தகுதி வாய்ந்த அனைவரும் உடனடியாக விண்ணப்பிப்பதன் மூலம் அரசாங்க வேலை வாய்பினையும் மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.