ஓரணியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள்

ஜம்மு-காஷ்மீரின் ஏழு முக்கிய அரசியல் கட்சிகள் மத்திய பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.

நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக ஏழு முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,காலியாக உள்ள பதவிகளுக்குத் தேர்தல் டிசம்பர் மாதத்தில் எட்டு கட்டங்களாக நடைபெற போவதாக ஜம்மு – காஷ்மீர் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குப்கர் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் சஜாத் கனி லோன் கூறுகையில் “நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாக, வரவிருக்கும் டி.டி.சி தேர்தல் இருக்கிறது. இந்தத் தேர்தலை நாங்கள் ஒற்றுமையாகப் சந்திப்போம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது”  என்றார்.