நடுநிலமையை கடைப்பிடிக்க சிறீலங்கா தீர்மானம்

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ள போதும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நடுநிலமையை கடைப்பிடிக்க தாம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோவுக்கு(Mike Pompeo) சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மைக் பொம்பியோவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் விதிகளின் அடிப்படையில் இந்து சமுத்திரப் பிரதேசத்தை நடுநிலமையாக பேணுவதுடன், அணிசேரா கொள்கைகளையும் பின்பற்றப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்கா இராணுவத்தளபதி மீது கொண்டுவரப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் மறுபரிசீலினை செய்யுமாறு சிறீலங்கா அரசு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.