நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டால் கோவிட்டை ஒழிக்கலாம் – ரெட்றோஸ் கெப்ரியேசஸ்

உலகநாடுகள் ஒருங்கிணைந்து செயற்பாட்டால் கோவிட்-19 நோயை உலகில் இருந்து ஒழிக்கமுடியும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்றோஸ் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஜெனீவாவில் கடந்த வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நாம் மேற்கொண்ட அவசர அழைப்பை பல நாடுகள் உள்வாங்கிக் கொண்டதுடன் விரைவாக செயற்பட்டுமிருந்தன. பல நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புடன் இணைந்து செயற்பட்டன.

அவர்கள் தமது நடவடிக்கை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, தகவல்களை பரிமாறி, தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்றுவரை 21 நாடுகள் அதனை மேற்கொண்டுள்ளன. ஏனைய நாடுகளும் அதனை பின்பற்றி வருகின்றன. இது நீண்டகால சுகாதார பாதுகாப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.