ஒரே வேளையில் இரு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கை – ஹனா சிங்கர்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடற்சூழல் மாசடைவு ஆகிய இரு சவால்களையும் இலங்கை ஒரே வேளையில் எதிர் கொண்டுள்ளது என ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே இலங்கை இந்த சவால்களில் இருந்து மீள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் உதவ முன் வர வேண்டும் என்றும்   ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பின்னடைவில் இருந்து மீட்சிபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பென்று குறிப்பிட்ட அவர், இந்த அனர்த்தத்தின் விளைவாக  கடற் பிராந்தியத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றை சீர் செய்வதற்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைத்துத் தரப்பினரும் விரைந்து முன்வர வேண்டும் என்றார்.