எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும்- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெண்கள் போராட்டம்

எல்லையின் மற்றொரு பக்கத்தில் இருக்கும் தங்களின் உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கக் கோரி, ஸ்ரீநகரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பிரஸ் என்களவே பகுதியிலே இருந்து கண்டதகர் பகுதிக்குப் பேரணியாக சென்ற பெண்கள், தங்களுக்குக் குடியுரிமை வழங்கக்கோரியும், எல்லையைத் தாண்டி செல்ல அனுமதி வழங்கக்கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“நாங்கள் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்த) ஆண்களைத் திருமணம் செய்ததில் வதறேதும் இல்லை. அவர்கள் இந்தியாவின் குடிமகன்கள். நாங்கள் எங்களின் சம உரிமையை கோருகிறோம்” எனப் போராட்டத்தில் பங்கேற்ற சாய்ரா கூறியுள்ளார்.

“எங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசாங்கம் எங்களை நாடு கடத்தல் வேண்டும். நாங்கள் பயண ஆவணங்களைக் கோருகிறோம்.  அதை வைத்துத்தான் நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியும்” எனப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த மற்றொரு பெண் கூறியுள்ளார்.

“பாகிஸ்தானிலிருந்து வந்த அட்னான் சமிக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்தபிறகும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் தீவிரவாதிகள்  போல் நடத்தப்படுகிறோம்” என அந்த பெண்கள் கூறியு்ளார்.

ஆதிகாரபூர்வ தகவல்களின் படி, 2010 ஆம் ஆண்டு புனர்வாழ்வு கொள்ளை வெளியானதில் இருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 150 பெண்கள், தங்கள் கணவர்களுடன் )முன்னாள் போராளிகள்) காஷ்மீர் பகுதிக்குக்  குடியேறி  இருக்கின்றனர்.

நன்றி- தி இந்து