உலகளவில் கொரோனாவால் 30.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  3,058,567  பேர்  உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 143,588,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

அமெரிக்காவில் இது வரையில், 32,536,470 பேர் பாதிக்கப்பட்டு, 582,456 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 15,616,130 பேர் இது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை182,570ஆக அதிகரித்துள்ளது.பிரேஸில் 14,050,885,பேர் பாதிக்கப்பட்டு, 378,530 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு ரஷ்சியாவில் 4,727,125 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகியதோடு இது வரையில், 106,706 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.