ஈராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா உருவாக்குகின்றது – ஈரான்

ஈராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உருவாக்குவதாக ஈரான் மதத் தலைவர் அய்த்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரான் மதத் தலைவர் அய்த்துல்லா கொமேனி கூறும் போது, “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மை மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. அவை இந்தப் பிராந்தியத்தில் பிளவை ஏற்படுத்துகின்றன. ஈராக் மற்றும் லெபனானில் அரசிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களது கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும் அவை அரசியமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே தீர்வுகாண முடியும் என்று உணர வேண்டும்” என்றார்.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களக்கு மேலாக போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

iran2 ஈராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா உருவாக்குகின்றது – ஈரான்ஈராக்கில் இம்மாதம் நடந்த போராட்டத்தில் மட்டும் 200இற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ஊழல் காரணமாக அரசை எதிர்த்து, போராட்டக்காரர்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.