இராணுவக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த கோவிட்19 இனை சிறீலங்கா பயன்படுத்தக்கூடாது- சூக்கா

கோவிட் 19 இற்கான இலங்கையின் இராணுவமயப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மேற்பார்வை போதாமல் இருப்பது சில பாரதூரமான மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

“கோவிட் 19 இற்கான பதில் நடவடிக்கையினை ஜனாதிபதி இருந்த அதே  இராணுவப்படையணியிலே கடமையாற்றிய இலங்கையின் போர்க் குற்றவாளி ஒருவர் தலைமை தாங்குகின்றமையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை செய்தல் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக அடைக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 அவசர காலநிலையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம், விகிதசமம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற கோட்பாடுகளைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும் என நீதிக்குப்புறம்பான மற்றும் உடனடி அல்லது எழுமாற்றான கொலைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அக்னஸ் கொலமாட் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகளை விமர்சித்து சமூகவலைத் தளங்களில் பதிவுகளை மேற்கொள்பவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் செயல்.

அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் சிவில், கட்சி சாரா சுயாதீனமான ஒரு பதில் நடவடிக்கை ஆணைக்குழுவினை அமைக்குமாறும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தாம் விரும்பும் எதையும் செய்வதற்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றோம். விசேடமாக ஏற்கனவே மதிப்பிழந்த அதிகாரிகளின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்த கோவிட்19 இனை ஒரு சாட்டாக பயன்படுத்தக்கூடாது, என சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.