இரணைதீவில் உடல் அடக்கம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம் கடும் எதிர்ப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணை தீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி – இரணை தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது எனப் பதிவிட்டுள்ளார்.