இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க புதிய நிபந்தனை: அச்சத்தில் முதலாளிகள் 

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தோனேசிய தொழிலாலர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான இந்தோனேசிய தேசிய வாரியம், வரும் ஜனவரி 1 முதல் வீட்டு வேலைகளுக்காக தைவானில் இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள்/ முதலாளிகள் அனைத்து வித கட்டணங்களும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

இதனால் தைவானில் ஒரு இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு 30,000 தைவான் டொலர்களிலிருந்து 1 இலட்சம் டொலர்களுக்கு உயரும் (இந்திய மதிப்பில் 22 இலட்சம் ரூபாயிலிருந்து 75 இலட்சம் ரூபாய்க்கு மேல் உயரும்) எனக் கூறப்படுகின்றது.

இந்தோனேசிய அரசின் இந்த அறிவுறுத்தல் தைவான் நிறுவனங்களிடையே பொருளாதார ரீதியான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே சமயம், தைவான் அரசத் தரப்பில் இது தைவானுக்கு மட்டும் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இந்தோனேசிய அரசுடன் விவாதிக்கப்படும் என தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் Hsu Ming-chun தெரிவித்திருக்கிறார்.