இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 174 பேர் பலி

இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 174 பேர் கொல்லப்பட்டதுடன், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.Indonesia foot ball இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 174 பேர் பலிஉலகில் இடம்பெற்ற உதைபந்தாட்ட நிகழ்வு கலவரங்களில் இதுவே மிகவும் மோசமான கலவரமாகும். மைதானத்திற்குள் அத்துமீறி நுளைய முற்பட்ட ஆதரவாளர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மக்கள் சிதறி ஓடியதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்த கலவரத்தை தொடர்ந்து எல்லா லீக் உதைபந்தாட்ட போட்டிகளும் விசாரணைகள் முடியும் வரை நிறுத்தப்படுவதாக இந்தோனேசியாவின் அரச தலைவர் ஜோகோ விடூடு தெரிவித்துள்ளார்.

38,000 பார்வையாளர்கள் இருக்க கூடிய அரங்கத்திற்குள் 42,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் இந்த அனர்த்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. பொருமளவானர்கள் அவசரமாக வெளியேறும் போதே கொல்லப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றுவதற்கு அவசரமான பாதைகள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.