இந்திய கடற்படையில் இணைந்த இரண்டாவது விமானந்தாங்கி கப்பல்

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் விக்ராந் எனப்படும் விமானம் தாங்கி கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (2) இணைக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ரஸ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்தியா என்ற விமானந்தாங்கி கப்பல் சேவையில் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

3 பில்லியன் டொலர்கள் செலவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் 1700 கடற்படையினர் பணியாற்றும் வசதியை கொண்டுள்ளதுடன், மிக்-29 வகை தாக்குதல் விமானங்கள் மற்றும் உலங்குவானுர்திகள் உட்பட 30 விமானங்கள் தரித்து நிற்கும் வசதி கொண்டது.

8,600 மைல்கள் தூரவீச்சுக் கொண்ட இந்த கப்பல், 45,000 தொன்கள் எடை கொண்டது.

சீனாவிடமும் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன. முதலாவது கப்பலை அது 1998 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தது. இரண்டாவது கப்பலை உள்ளூரில் அது கட்டியிருந்தது.