ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியுள்ள ஒரு தருணத்தில் இந்த வரவு செலவுத் திட்டம் இந்த நெருக்கடிகளைத் தீர்க்குமா என்பது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறைப் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்