இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் – அமெரிக்கா

இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என தனது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது அமெரிக்கா.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை  பரவி வருகிறது. மேலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு 3 இலட்சத்தை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 1.5 கோடியைக் கடந்துள்ளது.அதே நேரம் 24 மணி நேரத்தில் 1,619 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 இலட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 12 கோடியே 38 இலட்சத்து 52 ஆயிரத்து 566 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் முதல், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ” இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் பயணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட புதிய வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மற்றும் பரப்பும் அபாயம் உள்ளது.

எனவே, இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், பயணத்திற்கு முன்பாக முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று  காரணமாக, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்திய பயணங்கள் குறித்து சில கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்த