இந்தியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: WHO

இந்தியாவில் காணப்படும் புதியவகை  கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, 1,83,76,524 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி-1-617 உருமாறிய கொரோனா வைரஸ் குறைந்தது 17 நாடுகளுக்கு பரவியுள்ளது. தரவு தளத்தில் 120-க்கு மேற்பட்ட வைரஸ் வரிசைகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பெரும்பாலான வைரஸ் வகைகள் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பதிவேற்றப்பட்டன என்றும்  பி-1-617 உருமாறிய வைரஸ் பிறழ்வு மற்றும் குணாதிசயங்களை கலவை மாறுபாடு என்று அறிவிப்பதை நிறுத்தியுள்ளது எனவும்  உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் பிற மாறுபாடுகளைக் காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது. இது வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு   எச்சரித்துள்ளது.