இந்தியாவின் நிலைமை இதயத்தை நொருக்குகிறது -WHO

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பேரவலம் இதயத்தை நொருக்கும் வகையில் அமைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை மூன்றரை இலட்சத்துக்கு அதிகமாகப் பதிவாகி வருகிறது.  உயிரிழப்புக்கள் 2000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதே நேரம் ஒக்சிஜனுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிகளவானோர் உயிரிழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

உலக சுகாதார அமைப்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவசர கால தேவைக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்கிறது. இதுவரை ஐ.நா.வின் போலியோ ஒழிப்பு, காசநோய் ஒழிப்புத் திட்டங்களில் பணியாற்றிவந்த நிபுணர்களை இந்தியாவிற்கு உதவியாக அனுப்பியுள்ளது.

கடந்த 9 வாரங்களாகவே தொடர்ந்து உலகளவில் பல இடங்களிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் மட்டும் உலகளவில் ஏற்பட்ட பாதிப்பானது கடந்த 5 மாதங்களில் ஒட்டுமொத்த உலகமும் சந்தித்த பாதிப்புக்கு இணையானது.
அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரேசில், மெக்சிகோ இருக்கின்றன. நான்காவது இடத்தில் உள்ள இந்தியா அண்மைக்காலமாக அதிக தொற்றாளர்களைக் கண்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.