இலங்கையில் கொரோனா  2ஆவது தடுப்பூசி போடும் திட்டம் நாளை ஆரம்பம்

இலங்கையில் கொரோனா தொற்று பரம்பலில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு தொகுதியினருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்துகை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்தள்ள போதும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை  647ஆக அதிகரித்துள்ளது.

 மேலும் 102, 376ஆக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் முதற் கட்டமாக அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது செலுத்துகை நாளை முதல் முன்னெடுக்கப்பட இருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலாவதாக தடுப்பூசியின் 2வது செலுத்துகை இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.