அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்

இந்தியாவில் இராமர் பிறந்த இடமான உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் அமையவுள்ள பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக நாளை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்தியாவில் பல ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த அயோத்தி வழக்கில் முஸ்லிம்கள் பாபர் மசூதி கட்டுவதற்கும் இந்துக்கள்  இராமர் கோவில் கட்டுவதற்கும் தொடரப்பட்ட வழக்கில் சென்ற ஆண்டு அந்த இடம் இந்துக்களுக்குரியது என்றும், அதில் இராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கமைவாக கட்டடப்பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வில் 175 பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.