தமிழரசு கட்சி மகிந்தவுடன் பின்கதவுப் பேச்சு -கொழும்பு ஆங்கில ஊடகம்

தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் பின்கதவு வழியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக சில அரசியல் வட்டாரங்கள் தமக்கு தெரிவித்ததாக ‘எக்கோணமி நெக்ஸ்ட்’ (ECONOMY NEXT) என்ற பிரபலமான கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்த முற்பட்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் இந்த செய்தியை எழுதிய அர்ஜுனா ரணவன என்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘Political sources told EconomyNext that there were “back-channel” talks between ITAK and Prime Minister Mahindra Rajapaksa for a post-election alliance.Our repeated calls to Sumanthiran and other ITAK leaders over the past week have not been answered’

இதேவேளைஇ தேர்தலின் பின்னர் தமிழ் அரசியலில் பெரும் மாற்றம் ஒன்று இடம்பெறும் என்றும் தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் ஆட்சியில் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் வட மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்மொழியப் பட்டிருப்பவருமான கலாநிதி சுரேன் ராகவன் ‘எக்கோனோமி நெக்ஸ்’ க்கு தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப் பட்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தேர்தல் பிரசாரங்களின்போது தெரிவித்துவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://economynext.com/sri-lankas-northern-and-eastern-parties-will-join-winners-of-parliamentary-election-in-new-government-raghavan-72593/