அமேசான் மழைக்காடுகளில் `தங்க நதிகள் – நாசா தகவல்

அமேசான் மழைக்காடுகளில் எவ்வளவு தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன என்பதை விளக்கும் படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

படத்தில் தங்க நிறத்தில் நதி போல காட்சியளிப்பது உண்மையில் நதியல்ல. அது தங்கச் சுரங்கப் பணிகளுக்காக முறையாக தங்கத்தைத் எடுக்க உரிமம் பெறாதவர்கள் தோண்டி வைத்திருக்கும் குழிகள் என இந்த விண்வெளி முகமை கூறியுள்ளது.

இந்த புகைப்படங்கள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை.

பொதுவாக இந்தக் குழிகளை பார்வைக்குக் காட்டமாட்டார்கள். சூரிய ஒளி பட்டு எதிரொலிப்பதால் இப்படி  ஒளிப்பதாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஒரு விண்வெளி வீரர், கடந்த டிசம்பர் 2020-ல் இந்த அரிய புகைப்படத்தை எடுத்துள்ளார் என்றும் இந்த முகமை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் மட்ரே டி டாய்ஸ் என்கிற பகுதியில் எவ்வளவு மோசமாக, இந்த தங்கச் சுரங்கப் பணிகள் நடக்கின்றன என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் இந்தப் படம்.