அமெரிக்காவில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 22 மில்லியன்

கொரோனா வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டதால் அங்கு வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (16) வரை 22 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த 3 வாரங்களில் அங்கு 22 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளதால் அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

நிறுவனங்கள் மீள திறக்கப்படும் போது பலர் பணிகளில் மீண்டும் இணையும் சாத்தியங்கள் உள்ளபோதும், கடந்த பெப்ரவரியில் இருந்த நிலையை 2022 ஆம் ஆண்டே அமெரிக்கா மீண்டும் அடையும் என ஒக்ஸ்போட் பொருளியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.