அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பானுக்கு IAEA அனுமதி   

ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பானுக்கு சர்வதேச அணு சக்தி முகமை (IAEA) ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜப்பானில் தற்போது பயன்பாட்டில் இல்லாத  புகுஷிமா அணு உலையின் அணுக்கழிவுகளை சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜப்பான நாட்டுப் பிரதமர் யோஷிஹிடே சுகா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியபோது, அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றுவது இன்றியாமத பணி. இது ஓரிரு நாளில் முடியக்கூடியது அல்ல. தசம கால பணி. அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும் என்றார்.

“அணு உலை கழிவுகளை அகற்றுவது தொடர்பாக சில மோசமான வதந்திகள் பரவுகின்றன. அவற்றை நிச்சயமாக நாங்கள் கட்டுப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார், கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டெப்கோ (TEPCO), நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்.

இந்நிலையில், இந்த ஒப்புதலுக்கு எதிர்க்கட்சியினரும், இயற்கை ஆர்வலர்களும், கிரீன்பீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும்  உள்ளுர் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம் சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) இந்த ஒப்புதலுக்கு  அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.