யேமன் சிறை மீது சௌதி கூட்டணி விமான தாக்குதல்: 70 பேர் பலி,ஐ.நா கண்டனம்

சௌதி கூட்டணி விமான தாக்குதல்

சௌதி கூட்டணி விமான தாக்குதல்: யேமன் நாட்டில் உள்ள தடுத்து வைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி  நடத்திய விமானத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை ஐ.நா. கண்டித்துள்ளது.

இந்த தடுத்துவைப்பு மையம் (அல்லது சிறைக்கூடம்), ஹுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளது.

இந்நிலையில்,போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்படவேண்டும் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ்,  இந்த விமானத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்தவும் உத்தரவிட்டுள்ளார்.

யேமனில் செயல்படும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணி நாடுகள் 2015 முதல் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply