தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி திருகோணமலையில் சுவரொட்டிகள்

அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க

அரச, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி திருகோணமலை நகர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் அரச, அரை அரச தனியார்துறை சம்பளத்தை ரூபா 15000 ஆக அதிகரி, தனியார் துறையின் ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 26000ஆக ஆக்கு. மற்றும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ரூபா 1500ஆக ஆக்கு என்ற வாசகங்கள்  எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுவரொட்டிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொழிலாளர் போராட்டம் மத்திய நிலையம் எனும் பெயரில் பிரசுரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply