பட்டினிக் குறியீட்டில்  107ஆவது இடத்தில் இந்தியா!

33
42 Views

உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருப்பதாக குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2010-14 காலக்கட்டத்தில்  குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி  பாதிக்கப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, இது 2015-19-ல் மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது.

உலகப் பட்டினிக் குறியீட்டு நாடுகள் 107-ல் இந்தியா 94-ம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75ம் இடத்திலும் பாகிஸ்தான்  88ம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா  மோசமாக உள்ளது.

நான்கு அளவுகோல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.

சைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும்  ஊட்டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமாக இருப்பதாகவும் 20 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14% மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும்  குழந்தைகள் விகிதம் இந்தியாவில் மிகக்குறைவாக 3.7% ஆக உள்ளது.

தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விடவும் மோசமாக  டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுதும் 69 கோடி மக்கள் இன்னமும் ஊட்டச்சத்தின்மையினால் அவதிப்பட்டு வருவதாக இதே அறிக்கை கூறுகிறது. வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு நடவடிக்கைகளை கோவிட்-19 வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது.

“2030-ம் ஆண்டில் பட்டினியை பூஜ்ஜியமாக்கும் நீடித்த வளர்ச்சி இலக்கை நோக்கி உலக நாடுகள் செல்லவில்லை என்று குற்றம் சுமத்தும் அந்த அமைப்பு, இந்த நிலை தொடருமானால் 37 நாடுகள் பசியைக் குறைக்கும் விகிதத்திலும் பின்னடைவே காணும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here