நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்?

359 Views
இலங்கையிலிருந்து சென்று அவுஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,ராஜ் உடவத்த  புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துள்ளதையடுத்து அக் குடும்பத்தின் தஞ்சக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரும் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

Leave a Reply