தமிழ்நாடு:  ஈழ அகதி முகாம்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

365 Views

தமிழகத்தில் உள்ள செய்யாறு அருகே பாப்பாந்தாங்கல் இலங்கை அகதி முகாமில் உள்ள 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மீதமுள்ள 178 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 240 பேரும், தவசிக் கிராம முகாமில் 228 பேரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply