சோவித் ஒன்றியத்தின் முதலாவதும், இறுதியுமான முன்னாள் அரச தலைவர் கொர்பச்சேவ் காலமானார்

299 Views

சோவித் ஒன்றியத்தின் முதலாவதும், இறுதியுமான முன்னாள் அரச தலைவர் மிகெயில் கொர்பச்சேவ் (91) சுகவீனம் காரணமாக நேற்று (30) மொஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

ஆப்கானில் இருந்து சோவித்து படைகளின் வெளியேற்றம், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிகளின் ஒருங்கிணைவு மற்றும் மேற்குலகத்துடனான பொருளாதார வர்த்தக மேம்பாடு உட்பட பல மாற்றங்களை கொண்டுவந்த அவர் 1990 ஆம் ஆண்டு அரச தலைவராக பதவியேற்றார்.

சோவியத்து ஒன்றித்தில் இருந்த 15 குடியரசுகளில் இவரின் காலப்பகுதியில் தான் சோவித்துக்கு எதிரான கருத்துகள் தோன்றியதுடன், 1991 ஆம் ஆண்டு சோவித்து ஒன்றியம் வீழ்ச்சியும் கண்டிருந்தது.

இவரின் உடல் மொஸ்கோவில் உள்ள அவரது மனைவி ரைசாவின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply