சீனாவுடனான உயிரியல் ஆயுத தயாரிப்பு ஒப்பந்தம் பாகிஸ்தான் விளக்கம்

282 Views

சீனாவுடன் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக வந்த செய்திகளையடுத்து பாகிஸ்தான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது

சீனாவும் பாகிஸ்தானும் மூன்று ஆண்டுகளுக்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் “அந்த்ரக்ஸ்“ தொடர்பான பல ஆராய்ச்சிகளை செயற்படுத்துவது உட்பட உயிரியல் போர்த் திறந்களை விரிவுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவுஸ்திரேலியப பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸை உருவாக்கியதாக கருதப்படும் வூஹான் இன்ஸ்ரிரியுட் ஒப் வைரலஜி நிறுவனம் பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான், இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்ததுடன், இது அரசியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், இது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply