கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களை கவரவுள்ள ட்ரம்ப்

587 Views

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வேளையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மக்களைக் கவருவதற்காக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளார்.

கருத்துக் கணிப்பின்படி பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களைக் கவர ட்ரம்ப் திட்டமிட்டு வருகின்றார். தேர்தலில் தனக்கான வாய்ப்பாக தடுப்பூசியை பயன்படுத்தவும் ட்ரம்ப் முயற்சித்து வருகின்றார்.

அமெரிக்க நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு மையம் மாகாண அரசுகள், உள்ளுர் நிர்வாகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க ஒக்டோபர் இறுதி அல்லது நவம்பர் ஒன்றாம் திகதிக்குள் தயாராக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply