கப்பலில் வேலை செய்யும் 6 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ்? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

366 Views

வர்த்தக கப்பல் ஒன்றில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து எகிப்து பயணப்படும் வர்த்தக கப்பலில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த வர்த்தக கப்பலானது சீனாவின் முக்கிய 3 துறைமுகங்களில் 5 நாட்கள் தங்கிச் சென்றுள்ளது.

இந்த கப்பல் வந்து சென்ற துறைமுகங்கள் வுஹான் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளன, இது கொரோனா வைரஸின் மையமாக அடையாளம் காணப்பட்டது. வுஹானிலிருந்து 922 கி.மீ தூரத்தில் நிங்போ துறைமுகம் அமைந்துள்ளது.

இதனிடையே நேற்று காலை குறித்த கப்பலானது இலங்கையின் காலி நகருக்கு அருகாமை வழியாக கடந்து சென்றுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி எகிப்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கையர்கள் 6 பேருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply