உளவு நீர்மூழ்க்கிக் கப்பலில் தீ – 14 ரஸ்ய கடற்படையினர் பலி

483 Views

ரஸ்யாவின் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த கப்பல் தனது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடந்த திங்கட்கிழமை (01) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்புப் படையினர் உதவிக்கு விரைந்தபோதும், கடற்படையினரில் பலர் தீயினால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்த வகையான நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான விபரத்தை ரஸ்யா வெளியிடவில்லை. ஆனால் ஏ.எஸ்-12 வகையான உளவு பணியில் ஈடுபடும் நீர்மூழ்கியே விபத்தில் சிக்கியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply