பாதுகாப்பான தொடர்வண்டிக் கடவைக்கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இன்று காலை 7 மணியளவில் கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் பாதுகாப்பு கடவை  அமைத்த தருமாறு கோரி  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் போது படையினர் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்தே குறித்த பாதையை பாதுகாப்பான கடவையாக மாற்றி தருமாறு மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த  போராட்டம் காரணமாக யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயில் சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தை தொடர வேண்டி ஏற்பட்டது. 625.0.560.320.160.600.053.800.700.160.90 பாதுகாப்பான தொடர்வண்டிக் கடவைக்கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

குறித்த பகுதியில் போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றம் புகையிரத திணைக்கள அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறித்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணிநேரம் இடம்பெற்றது. குறித்த பாதையின் ஊடாக பாடசாலை மாணவர்கள், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், பொது மக்கள் என பலர் பயணிக்கின்ற நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பான கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது வருகை தந்திருந்த அதிகாரிகள் ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியபோதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.