உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர் மட்டக்குளிய பிரதேசத்தில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேபிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.