இலங்கைக்கு கடத்த இருந்த மஞ்சள் பறிமுதல்

307 Views

தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு  கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் பொதிகளுடன்  படகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் வைத்து இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த படகு தூத்துக்குடியை சேர்ந்தது எனவும் படகில் உள்ள ஆதார் அட்டை பாம்பன் சேதுபதி நகரை சேர்ந்தவர் உடையது எனவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவீஸ்ச், பாம்பன் வடக்கு கடற்கரையில் கைப்பற்றப்பட்ட சமையல் மஞ்சளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மீனவர்களிடம் விசாரனை நடத்தி வருகிறார்.

Leave a Reply